புதுடில்லி : பார்லி மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கி உள்ளது. இந்த கூட்டத் தொடர் ஆக.10 ம் தேதி வரை நடைபெறும்.
கடந்த கூட்டத்தொடரை போலவே தற்போதும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்எஸ்ஆர் காங்., எம்.பி.,க்கள் பார்லிமென்ட் உள்ளே உள்ள காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவைக்குள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன.
பெரும்பரபரப்புக்கு இடையே பார்லி கூட்டத் தொடர் துவங்கி நடந்து வருகிறது. ராஜ்யசபாவிற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நாட்டிய கலைஞர் சோனல் மான்சிங், எழுத்தாளர் ராகேஷ் சின்கா உள்ளிட்ட புதிய எம்.பி.,க்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
லோக்சபாவில் பல்வேறு காரணங்களை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அவை துவங்கியது முதல் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
நீதி வேண்டும்,என அவர்கள் முழக்கமிட்டு வருவதால் லோக்சபாவில் கடும் அமளி நிலவி வருகிறது.
வதந்திகளால் பலர் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ராஜ்யசபாவில் தெலுங்கு தேச கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டது.