RETamil Newsஅரசியல்இந்தியாஉலகம்
பாகிஸ்தானின் புதிய அரசுக்கு சர்வதேச பண நிதியம் நிதிஉதவி செய்யக்கூடாது – அமெரிக்கா எச்சரிக்கை!
பாகிஸ்தானில் புதிய அரசுக்கு சர்வதேச பணநிதியம் நிதிஉதவி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பேயோ அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார்.
அப்போது பாகிஸ்தானில் புதிய பிரதமர் இம்ரான் கான் தலைமையின் கீழ் அமைய உள்ள அணுகுமுறைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அவர் கூறினார்.
மேலும் சீனாவுக்கு கொடுப்பதற்காக 82 ஆயிரம் கோடி ரூபாய்யை சர்வதேச பண நிதியத்திடம் பாகிஸ்தான் கேட்டிருப்பதாக தகவல் வெளியானது குறித்து போம்பேயோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்க்கு பதில் அளித்த அவர் பாகிஸ்தான் கேட்கும் நிதியை சர்வதேச நிதியம் பணம் கொடுக்கக் கூடாது என கூறினார்.
மேலும் இந்த விவகாரத்தில் சர்வதேச பணம் நிதியத்தின் செயல்பாடுகளை தான் கண்காணிக்க இருப்பதாக போம்பேயோ குறிப்பிட்டார்.