RETamil News
நாளை பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களை காட்டியது.
நாளை பக்ரீத் பண்டிகையையொட்டி மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. சிறிய ஆடுகளில் இருந்து பெரிய ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. 10 கிலோ எடை கொண்ட ஆடு அதிக பட்சமாக 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனையானது. 40 கிலோ கொண்ட பெரிய ஆடுகள் வரை சந்தையில் கொண்டுவரப்பட்டது.
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை மற்றும் இதர பொருட்களுக்காக அந்த சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த பக்ரீத் பண்டிகைக்காக குர்பானி கொடுப்பது வழக்கம்.இதனால் அந்த மேலப்பாளையம் சந்தையில் பல்வேறுபட்ட ஆடுகள் கொண்டுவரப்பட்டது. இன்று ஒரு நாளில் மட்டும் 5 ஆயிரம் ஆடுகள் விற்கப்பட்டன.
சுமார் 1 கோடிவரை ஆடுகள் ஒரே நாளில் விற்கப்பட்டதால், வியாபாரிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.