நாடு முழுவதும் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் திட்டத்தை தொடங்கிவைத்தார் – பிரதமர் மோடி
நாடு முழுவதும் தீபாவளி பரிசாக சிறு,குறு நடுத்தர தொழில்களுக்காக கடன் வழங்குவதற்கான திட்டத்தை டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
டெல்லி விஞ்ஞன் பவனில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ லி மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணை மந்திரி கிரிராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு சிறு,குறு நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் விண்ணப்பதாரர்களுக்கு 59 நிமிடத்தில் கடன் வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1 மணிநேரத்தில் ரூ.1 கோடி கடன் வழங்கி விரைவாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சிறு,குறு நடுத்தர தொழில்களை ஊக்குவித்து அதன் மூலம் வேலைவாய்ப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.மேலும் தொழில் தொடங்க ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் 50 இடங்களில் ஒன்றாக வரும் நாள் வெகு தூரம் இல்லை என்றும் கூறினார்.