ஈரோடு-பணம்-சேலைகள் திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள அருள்வாடி கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நீலிசித்தா (வயது 55). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் நீலிசித்தா அருள்வாடியில் தனியாக வசிக்கிறார்.இந்த நிலையில் நீலிசித்தா தூங்கி நேற்று காலையில் எழுந்து பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவை பார்த்தபோது அதிலிருந்த ரூ.1லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 3 சேலைகளை காணவில்லை. உடனே இதுகுறித்தும் தாளவாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.வீட்டின் பின்பக்க கதவை உடைத்த உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 3 சேலைகளை திருடிவிட்டு தப்பித்து சென்றது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்