தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்-இன்று மட்டும் 4,985 பேருக்கு பாதிப்பு!

சென்னை:
தமிழகத்தில் இன்று மட்டும் 4,985 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,298 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 87,235 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,119,412 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 50,800
இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை 19,06,617
இன்று மட்டும் 70 பேர் கொரானாவினால் பலியாகினர்.
இதுவரை பலி எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 3,861 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;1,21,776
இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது.
















