RETamil News
திருப்பூர் ;பனியன் நிறுவன அதிபர் கடத்தப்பட்டார் ; ரூ.21 லட்சம் கேட்டு மிரட்டல் ;
திருப்பூர் மாவட்ட சோலியாபாளையத்தில் நடந்து வரும் ஒரு பனியன் நிறுவனத்தின் அதிபர் மணிராஜ் அவரை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தியது. மேலும் அவரை விடுவிக்க ரூ.21 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இருந்தாலும் மணிராஜ் சாமர்த்தியமாக அவர்களிடம் பேசி அவர்களை வீட்டிற்கு வரவைத்தார். வந்த அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இந்த கொலை கும்பல் தன்னை காரில் கடத்தியதாகவும் , பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறினார். இதன் அடிப்படையில் அந்த அதிபரை காரில் கடத்திய குற்றத்திற்காக தினேஷ், விஜி, சுபின், நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.