fbpx
RETamil News

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை ! 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழைக்கு இன்று வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கியது. இதை அடுத்து படிப்படியாக கர்நாடக , ஆந்திரா , தெலுங்கான, தமிழ்நாடு என மழை பெய்ய தொடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே கேரளாவை ஒட்டி உள்ள தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை அதிக அளவில் பெய்ய தொடங்கியுள்ளது.

அதனால் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது, கேரளாவில் விடாமல் கன மழை பெய்துகொண்டிருக்கும் நிலையில் , அதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கிறது என்று கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close