தன் உண்டியல் சேமிப்பு பணத்தை கேரளாவுக்கு கொடுத்த 9 வயது சிறுமி – வருடந்தோறும் புது சைக்கிள் தர ‘ஹீரோ’ நிறுவனம் முடிவு.
விழுப்புரம் பகுதியில் வசித்து வருபவர் சிவசண்முகம் இவரது மகள் அனுப்பிரியா வயது 9.
அவள் தனக்கு சைக்கிள் வாங்குவது பெரும் கனவாக இருந்தது. அதனால் அவள் தனக்கு சைக்கிள் வாங்குவதற்க்காக கடந்த 4 வருடமாக தன் உண்டியலில் ஆசைஆசையாக சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தாள் சிறுமி அனுப்பிரியா.
அனுப்பிரியாவுக்கு வரும் அக்டோபர் 16-ஆம் தேதி பிறந்த நாள் அதை ஒட்டி அப்போது சைக்கிள் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்திருந்த வேளையில், கடந்த சில நாட்களாகவே கடும் மழையாலும் , வெள்ளத்தாலும் , கேரளா முழுவதும் வெள்ள காடாக இருப்பதையும் அதனால் அங்குள்ள மக்கள் பெரும் சேதம் அடைந்துள்ளதையும் பார்த்தால் சிறுமி அனுப்பிரியா.
வெள்ளத்தால் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கிருக்கும் பெரியவர்கள் குழந்தைகள் என்று எல்லா செய்தியும் பார்த்த ஒன்பது வயது சிறுமி அனுப்பிரியா, தன் தந்தையுடம் சென்று அப்பா எனக்கு சைக்கிள் வேண்டாம் அந்த பணத்தை கேரளாக்கு அனுப்பிவிடலாம் என்று கூறினால்.
அதை கேட்டதும் அவள் தந்தை மிகவும் ஆச்சர்யம் பட்டார் . உண்டியலை உடைத்து பார்த்த போது அதில் எட்டாயிரம் ரூபாய் சேர்க்கப்பட்டிருந்தது.பின்னர் இந்த பணத்தை அவள் தந்தை கேரளா முதல்வருக்கு அனுப்பினார்.
அந்த சிறுமியின் பணத்தை கேரளா முதல்வருக்கு அனுப்பிய விவரத்தை அறிந்த ‘ஹீரோ’ சைக்கிள் நிறுவனம் அந்த சிறுமிக்கு வருடந்தோறும் புது சைக்கிள் தரப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை அறிந்த அந்த சிறுமி அனுப்பிரியாவின் அக்கம் பக்கம் உள்ள மக்கள் அவளை பாராட்டி ஊக்குவித்து வருகின்றனர்.