fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

தகவல் தொடர்பு மையம் அமையும் அறிவிப்பாணையை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !

சமூக வலைதளங்களில் செயல்படுபவர்களை கண்காணிக்கும் முயற்சி நடைபெறுவதாக எழுந்த புகாரை அடுத்து தகவல் தொடர்பு மையம் அமைக்கும் அறிவிப்பாணை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொது மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும் பொதுமக்கள் மத்தியில் தேசிய உணர்வை கூட்டமும் சமூக வலைதள தகவல் தொடர்பு மையம் அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

உலக அளவில் இந்தியாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளை முறியடிக்க இந்த மையம் அமைக்கப்படுவதாக மத்திய அரசு கூறியது.

ஆனால் தனிநபர் அந்தரங்கம் பேணும் உரிமையில் தலையிட முயற்சிப்பதாகவும், பொதுமக்களின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நோக்கத்தோடும் மத்திய அரசு இந்த முயற்சியில் ஈடுபடுதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் சமூக வலைதள தகவல் தொடர்பு மையம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்தது.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சமூக வலைதள தகவல் தொடர்பு மையம் அமைப்பதற்கான அறிவிப்பாணை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கேகே.வேணுகோபால் தெரிவித்தார்.

மேலும் சமூக வலைதள கொள்கையை மத்திய அரசு முழுமையாக மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும் அட்டர்னி ஜெனரல் தகவல் தெரிவித்தார். இதை ஏற்று நீதிபதிகள் வழக்கினை முடித்து வைத்தனர்.

Related Articles

Back to top button
Close
Close