fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் இன்று துவங்கப்படுகின்றது – வீடு தேடிவரும் 40 சேவைகள்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் பக்கத்தில் ‘ ஆட்சிமுறையில் ஒரு புரட்சியாகவும் , ஊழலுக்கு வீழ்ச்சியாகவும் , உலகிலேயே முதல் முறையாக வீடு தேடி வரும் சேவைகள் என்னும் மக்களுக்கு வசதியான திட்டம் செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் தொடக்கப்படுகின்றது” என்று வெளியிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று முதல் இந்த சேவை அமல் படுத்தப்படுவதாகவும் , இதற்கு கூடுதலாக ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

எனவே இந்த திட்டத்தின் மூலம் திருமண சான்றிதழ் , சாதிசான்றிதழ் , ஓட்டுநர் உரிமம்,புதிய குடிநீர் இணைப்பு, ரேஷன் பொருட்கள் ஆகியவை வீட்டில் இருந்தபடியே பெரும் வசதி ஏற்படும்.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் டெல்லி அரசுக்கு உட்பட்ட வருவாய் துறை ,குடிநீர்வாரியம் , சமூகநலத்துறை, தொழிலாளர் நலத்துறை , சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட 40 துறைகளுக்கும் மக்கள் நேரடியாக செல்லாமல் வீட்டில் இருந்தபடியே அதன் சேவையை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close