டாய்லட் என்று நினைத்து மெயின் டோரை திறக்க முயன்ற பயணி – பறக்கும் விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு !!!
டெல்லியிலிருந்து பாட்னாவிற்கு சென்ற விமானத்தில் பயணி ஒருவர் டாய்லட் என்று நினைத்து மெயின் டோரை திறக்க முயன்றதால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியிலிருந்து பாட்னாவிற்கு கோஏர் நிறுவனத்தின் ஜி8 149 என்ற விமானம் பயணிகளை ஏற்றி சென்றது. அதில் பாட்னாவை சேர்ந்த பயணி ஒருவர் முதல் முறையாக விமான பயணம் செய்தார். அவர் முதல் முறையாக விமான பயணம் செய்வதால் விமான நடைமுறை பழக்கவழக்கம் பற்றி அவருக்கு தெரியாது.
இந்நிலையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தில் கழிப்பறை செல்வதற்காக அந்த விமானி எழுந்தார், ஆனால் தவறுதலாக கழிப்பறை என்று நினைத்து விமானத்தின் மெயின் டோரை திறக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் கூச்சல் போட்டு அவரை தடுத்தனர். ஆனால் இந்த சூழ்நிலையை புரிந்து கொள்ளாத அந்த பயணி மீண்டும் கதவை திறக்க முயன்றார். இதற்கிடையில் விமான பணியாளர் வந்து அவரை கழிப்பறைக்கு அழைத்து சென்றார்.
மேலும் விமான பயணியின் இந்த செயல் விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் வகையில் இருந்ததால் விமானம் தரை இறங்கியதும் அவர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு அந்த பயணி செய்த இந்த செயல் விமானத்தில் பயணித்த பயணிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.