சென்னையில் துவங்கியது ஓவிய கண்காட்சி ; மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லலித் கலா அகாடமியில் பெண்ணின் கிராமியத்தை வெளிப்படுத்தும் ஓவிய கண்காட்சி துவங்கியுள்ளது. இதை சென்னையில் உள்ள அனைத்து பொது மக்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
அதே போல் திருநாவுக்கரசரின் ஓவியங்கள் , பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் மிக நீதியாக சுட்டிக்காட்டி உள்ளனர். நடனமாடும் பெண்கள் நாட்டியத்தில் இல்லை, ஓடி திரியும் சேவல்கள் வீட்டில் இல்லை, துள்ளி திரியும் காளைகள் ஜல்லிக்கட்டில் இல்லை இவை அனைத்தும் நுங்கம்பாக்கத்தில் உள்ள லலித் கலா அகாடமியில் உள்ள ஓவிய கண்காட்சியில் தான் உள்ளது.
இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் தற்போது சில காலமாக பெண்களுக்கு நிகழ்ந்து வரும் பிரச்சனைகளை குறித்தும், அவர்களின் தன்னபிக்கையை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஓவியங்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கண்காட்சி வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.