கோவையில் உள்ள ஒரு இளைஞனுக்கு விதிக்கப்பட்டது வினோத தண்டனை !
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்த ஒரு இளைஞனுக்கு தண்டனையாக , 10 நாட்கள் போக்குவரத்து போலீசாருடன் நின்று போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்களுக்கு முன் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனம் ஒன்றை மடக்கி ஆவணங்கள் கேட்டபோது , மதுபோதையில் வாகனத்தை ஓட்டிவந்த வடவள்ளியை சேர்ந்த சுதர்சன் அங்கிருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினார்.
அதனால் அந்த இளைஞனை கைது செய்து நீதிமன்றத்தில் அஜர்செய்தனர். அவரது வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கமாக அவருக்கு தர வேண்டிய தண்டனைக்கு பதிலாக , போலிசின் கஷ்டத்தை அந்த இளைஞன் புரிந்துகொள்ளும் வகையில் நீதிபதி அவருக்கு வினோத தண்டனை வழங்கினார்.
அதன்படி கோவை போக்குவரத்து போலீசாருடன் இணைந்து கோவை பிரதான சாலையில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடவேண்டும் தினமும் தினமும் பணியை முடித்து சரியாக பணியாற்றியதாக அதிகாரி முன்பு கையொப்பமிட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நீதிமன்ற நடுவரின் உத்தரவை அடுத்து இன்று காலை முதல் அந்த இளைஞன் வேகத்தை வெயிலில் நின்று வேர்க்க வேர்க்க தன் முதல் நாள் பணியை தொடங்கினார் சுதர்சன்.
போலீசாரும் , பொதுமக்களும் நீதிமன்ற நடுவரின் இத்தகைய வினோத தண்டனையை வரவேற்க்கின்றனர்.