கோயம்பேட்டில் ; மெட்ரோ ரயிலுக்கு மின் சேவையை பெற சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் அதை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.அதனால் கோயம்பேடு-ஆலந்தூர் , சின்னமலை விமானநிலையம் , திருமங்கலம்- சென்ட்ரல் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதன் சேவை நடந்து வருகின்றது.
இந்நிலையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் மின் விளக்குகள் , ஏ.சி சேவை, ரயில் சேவை ஆகியவற்றிற்கு மின்சார தேவை அதிகமாக உள்ளது. அந்த மிசார தேவையை குறைக்க தான் கோயம்பேடு டிப்போவில் பராமரிப்புக்காக சுமார் 410 கிலோ வாட் மின்சாரம் உற்பத்திசெய்யும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த சோலார் பேனல்களிலிருந்து ஒரு மாதத்திற்கு சுமார் 55,350 யூனிட் அளவு மின்சாரம் உற்பத்தியாரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தவிர இதன் மூலம் ஒரு ஆண்டிற்கு மெட்ரோ ரயில் சேவைக்கு தேவைப்படும் மின்சாரத்திக்கான ரூ.15 லட்சம் அளவு குறையும் என மெட்ரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.