fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

மதுரையில் ஒரே நாளில் 12 பேர் பலி..! ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா!

Madurai registers 12 corona dead

மதுரை:

மதுரையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

எனவே, சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரைக்கும் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 1,073 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

அவர்களில் 423 பேர் இருந்து குணமடைந்துள்ளனர். 641 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 12 பேர் பலியானது அம்மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close