கொத்தமல்லி வரத்து குறைந்ததால் விலை திடீரென உயர்ந்தது – கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது.
ஓசூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அங்கு சாகுபடி செய்யப்படும் கொத்தமல்லி அழுகுவதால் அதனால் சாகுபடி பெருமளவு குறைந்துள்ளது. இதனால் மார்கெட்டுகளுக்கு வரும் கொத்தமல்லியின் வரத்து குறைந்துள்ளதால் கடந்த மாதம் கிலோ ரூ.20-க்கு விற்பனையான கொத்தமல்லி தற்போது கிலோ ரூ.100-க்கு வேகமாக உயர்ந்து விற்பனையாகி வருகின்றது.
ஓசூர் பகுதியில் சாகுபடியாகும் கொத்தமல்லி தான் தமிழகத்தின் அனைத்து பகுதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றது.மதுரை மாட்டு தாவணி சென்ட்ரல் மார்க்கெட் பகுதிக்கும், ஓசூர்
பகுதியிலிருந்து அதிக அளவிலும் , தேனீ , திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து குறைந்த அளவிலும் வரத்து இருக்கும்.
சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் முருகன் கூறியதாவது ; ஓசூர் பகுதியில் இருந்து கொத்தமல்லியின் வரத்து தினமும் இரண்டு முறை லோடானது வந்தடையும் ஆனால் தற்போது மழையால் சாகுபடி குறைந்துள்ளதால் கொத்தமல்லியின் வரத்தானது குறைந்துள்ளது. அடுத்த மாதம் விசேஷ தினங்கள் உள்ளதால் இதே நிலைமை நீடித்தால் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறினார்.