கேரள வெள்ள பாதிப்பை “அதிதீவிர இயற்கை பேரிடர்” என்று அறிவித்தது மத்திய அரசு!

கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள அழிவினை கருத்தில் கொண்டு அந்த அழிவை “அதிதீவிர இயற்கை பேரிடராக “அறிவித்துள்ளது நம் மத்திய அரசு.
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து கொண்டிருந்தது அதனால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது இதனால் 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்துள்ளனர்.
200-க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர்.அதே போல் வெள்ளத்தாலும் , நிலச்சரிவாலும் 17,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது. பல லட்சம் மக்கள் வெள்ளதிலுருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர்.
பல லட்சம் மக்கள் உடைமைகளும் இல்லாமல் தவிக்கின்றனர்.இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த அழிவை “அதிதீவிர இயற்கை பேரிடர்” என்று அறிவித்தது மத்திய அரசு.