கேரளாவில் இடைவிடாத மழையின் காரணமாக அனைத்து பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை 1500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவமும் மீட்ப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மழை, வெள்ளம் மற்றும் இரவு பகல் என்று பாராமல்
இராணு வீரர்கள் மீட்பு பணியில் உள்ளனர்.
இதுவரை 2.5 லட்சம் மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி , ஹெலிகாப்டரின் மூலம் கேரளா பாதிப்பை பார்வையிட புறப்பட்டார்.
மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் திருப்பிவிடப்பட்டது. அதனால் மோடியின் ஆய்வு பயணம் முடங்கியது.
அதனால் கொச்சியில் ஆளுநர் சதாசிவம், முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் பல அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கேரளாவிற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.500 கோடி வழங்குவதாக அறிவித்து உள்ளார்.