கேரளா ; கதறி அழுத ஊராட்சி தலைவி; என் ஊராட்சி மக்களை காப்பாற்ற முடியவில்லையே !!
கேரளா மாநிலத்தை சேர்ந்த சிறு கிராமமான நெடும்பச்சேரி என்ற கிராமத்திலும் வெள்ளம் சூழ்ந்தது. அந்த கிராம ஊராட்சி தலைவி மினி எல்தோரா வெள்ளத்தில் சூழப்பட்ட மக்களை அத்தாணி என்ற வெள்ளநிவாரண முகாமில் தஞ்சம் வைக்கப்பட்டனர். தன் ஊராட்சி மக்களை காப்பாற்ற முடியவில்லை என்று அந்த ஊராட்சி தலைவி மினி எல்தோரா கதறி அழும் காட்சி அந்த முகாமில் இருந்தவர்களின் மனசை உலுக்கியது.
“என் ஊராட்சியில் மொத்தம் 35,000 பேர் உள்ளனர்.இதில் எத்தனை பேர் வெள்ளத்தில் முழ்கியுள்ளனர்,எத்தனை பேர் காப்பாற்ற பட்டுள்ளனர் என்று தெரியவில்லை. காப்பாற்ற பட்டவர்களை 13 முகாம்களில் வைத்துள்ளனர். என் மக்கள் அனைவரும் பத்திரமாக உள்ளார்களா என்று தெரியவில்லை மிகவும் அச்சமாக உள்ளது” , என்று கண்ணீர் மல்க பேசினார் ஊராட்சி தலைவி மினி எல்தோரா.
கொச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அத்தாணி என்ற வெள்ளநிவாரண முகாம். அங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட நபர்களும் , 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் தஞ்சம் வைக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் , மருத்துவ
பொருட்களையும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார் மினி.எல்லா இடங்களிலும் , வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. விமான சாவை தற்காலிகமாக முடங்கியுள்ளது. ரயிலில் செல்ல முடியாது .பேருந்துகளிலும் செல்ல முடியாத நிலை என் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ
பொருட்களை எப்படி கொண்டு வருவேன் என்று புரியாமல் தவிக்கிறேன்’ என்று கூறினார் மினி.
கேரளா குழந்தைகளின் தவிப்பு ;
எனக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அனல் இந்த வெள்ளத்தால் கேரளாவின் எத்தனை குழந்தைகள் தவிக்கிறார்கள் என்று தெரியவில்லை.முடிந்த அளவுக்கு வெள்ளத்திலுருந்து முகாமிற்கு மக்களை அழைத்து வருகிறோம்.ஆனால் பயமாக இருக்கிறது என் மக்கள் எத்தனை பேர் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மழை கொட்டுகிறது என்னால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை.என்று அழுகையுடன் கூறினார் மினி எல்தோரா.
” இதுவரை எர்ணாகுளம் இது போன்ற வெள்ளத்தை பார்த்ததில்லை. கொச்சி நகரில் மழையை நாங்கள் மகிழ்ச்சியாக அனுபவித்திருக்கிறோம். ஆனால் இன்று வெள்ளத்தில் மூல்கும் நிலையையும் பார்த்துவிட்டோம். வெள்ளம் சீக்கிரம் வடிய வேண்டும் இதுவே எங்கள் ஒவ்வொருவரின் பிரார்த்தனையாக உள்ளது” என்று கவலையுடன் கூறினார் மினி எல்தோரா.