fbpx
RETamil News

கேரளாவில் “ரெட் அலர்ட் ” வாபஸ் பெறப்பட்டது. மழை படிப்படியாக குறையும். மக்கள் நிம்மதி பெருமூச்சு !

கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்துகொண்டிருக்கிறது அதனால் பெரும் வெள்ள பேருக்கும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கன மழை நீடிக்கும் என்பதால் “ரெட் அலார்ட் ” கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கேரளாவில் ஏற்பட்ட கனமழை இன்றில் இருந்து படிப்படியாக குறையும் என்று தமிழக வானிலை வெதர்மேன் தெரிவித்துள்ளது.இதை தொடர்ந்து கேரளாவில் “ரெட் அலார்ட் ” வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளம் 100 ஆண்டுகளில் பார்க்காத அளவு ஆகும். இவ்வாறு ஏற்பட்டுள்ள இத்தகைய வெள்ளத்தால் இதுவரை 14 மாவட்டங்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. முப்படை ராணுவமும் மீட்புப்பணியுள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது வரை 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.370-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள் 700-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளார்கள். 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இன்றிலிருந்து தான் மழை படிப்படியாக குறையும் என்று எதிர்பாக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
Close
Close