குஜராத்; 2022-ல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு இதுவே என் கனவு – பிரதமர் நரேந்திர மோடி.
இன்று ஒரு நாள் சுற்று பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அப்போது அந்த மாநிலத்தில் உள்ள ஜூஜ்வா என்ற கிராமத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினர். அப்போது அவர் கூறியதாவது;
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் உயர்ந்த தரம் உள்ளதாகவும் , மிக வலிமையாகவும் இருக்கும். இதற்க்கு பொது மக்கள் யாருக்கும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. குஜராத்தில் நான் நிறைய பாடம் கற்றிருக்கிறேன். அதில் முக்கிய பாடம் என்னவென்றால் குறிப்பிட்ட காலத்தில் கனவுகளை நிறைவேற்ற கற்றுக்கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் என் கனவு என்னவென்றால் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று 2022-இல் ஒவ்வொரு குடும்பமும் சொந்த வீடு இல்லாமல் இருக்கக்கூடாது.
அதன் அடிப்படையில் மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பின்னர் மோடி அவர்கள் குஜராத்தில் உள்ள தடவியல் பல்கலைக்கழகம் மற்றும் ராம் பவனில் சோம்நாத் கோயில் அறக்கட்டளை விழாவில் கலந்து கொண்டார்.