காபி குடிக்க அழைத்து சென்ற போது காவல்துறையினரின் பைக்கிலேயே தப்பிய கைதி !!!
சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் பாபு. இவர் பைக்கில் சென்று வழிப்பறி, கொள்ளையுள் ஈடுபட்டு வந்ததால் இவருக்கு பல்சர் பாபு என்றும் அடைப்பெயர் உண்டு. இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வேப்பேரி போலீசார் பல்சர் பாபுவை வழிப்பறி வழக்கில் கைது செய்தனர்.மேலும் அவர் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டுவந்ததால் அவர் மீது குண்டர்சட்டம் பாய்ந்தது.
அதனால் சிறையில் அடைக்கப்பட்ட பல்சர் பாபுவை , சிகிட்சைக்காக நேற்று முன்தினம் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை 6 மணியளவில் பல்சர் பாபு காபி வேண்டும் என்று தன் பாதுகாப்பிற்கு இருந்த போலீசாரிடம் கேட்டார் ஆனால் முதலில் மறுத்த அவர்கள் பின்னர் தங்கள் பைக்கிலேயே இரு காவலாளிகளுக்கு இடையே அமர வைத்து கொண்டு மருத்துவமனைக்கு வெளியே காபி குடிப்பதற்கு அழைத்து சென்றனர்.
அப்போது பல்சர் பாபு வாய் கொப்பளிப்பது போல் நடித்து, போலீசார் சற்று அசந்த நேரம் பார்த்து சாவியுடன் இருந்த போலீசாரின் பைக்கில் அமர்ந்து அதில் இருந்த துப்பாக்கியை தூக்கிப்போட்டு விட்டு மின்னல் வேகத்தில் பல்சர் பாபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதை கண்ட இரண்டு போலீசாரும் அதிர்ச்சி அடைந்து அவனை பிடிக்க இரண்டு தனி படை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.