fbpx
Others

பூச நட்சத்திரத்தின் மகத்துவம்முருகப்பெருமானை வழிபட்டு, வேண்டும் வரம் பெறலாம்…

தைமாதம் பிறந்ததும் தைப்பொங்கல் எவ்வளவு முக்கியமோ அதற்கு அடுத்தபடியாக நாம் எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கக்கூடிய ஒரு நாள் தைப்பூசம். தைப்பூசம் முருகப்பெருமானுடைய பல முக்கியமான பண்டிகைகளில் தலைசிறந்ததாகவே கருதப்படுகிறது. தைப்பூச தினத்தில் முருகப்பெருமானை வழிபட்டால் சகல துன்பங்களும் நீங்கி இன்பங்கள் பெருகும் என்பார்கள்.பண்டைய காலத்தில் விழாக்களைத் தமிழர்கள் பௌர்ணமியை ஒட்டியே நடத்தினார்கள். காரணம் போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் நடந்தே கோயில்களுக்குச் செல்ல வேண்டும். அதிலும் மலைத்தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் பௌர்ணமிக்கு மூன்று நான்கு தினங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு பௌர்ணமிநாளில்திருக்கோயிலைஅடைந்துவழிபட்டுபின்நிலவொளிவீசும்அடுத்தமூன்றுநாள்களுக்குள் ஊர் திரும்புவது வழக்கம்.அப்படிப் பௌர்ணமியை ஒட்டிக் கொண்டாடப்படும் பண்டிகைகளே சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகியவை.இவற்றுள் தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உரியதாகக் கொண்டாடப்படுகிறது. பழநியில் முருகப்பெருமான் கோயில் கொண்டது ஒரு தைப்பூச நாளிலேயே என்பார்கள்.எனவேதான்பழநியில்தைப்பூசம்மிகவும்சிறப்பாகநடைபெறும்.தைப்பூச நாளில் முருகன் திருத்தலத்துக்குச் சென்று வழிபடுவது விசேஷம். இயலாதவர்கள் வீட்டிலேயே சிறப்பாக வழிபடலாம். தைப்பூச நாளில் அதிகாலையிலேயே எழுந்து நீராடிப் பிறகு நீறு பூசி ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம்.வீட்டில் தைப்பூச தினத்தில் வீட்டில் ஆறு விளக்குகள் ஏற்றி முருகப்பெருமானைத் துதிக்க வேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ், வேல்மாறல் பாராயணம் போன்றவற்றைப் பாராயணம் செய்வது சிறப்பு.சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வது சிறப்பு. இயலாதவர்கள் எளிமையாகத் தேனும் தினை மாவும் சமர்ப்பித்து முருகப்பெருமானை வழிபட்டாலேபோதும், வேண்டும் வரம் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள்.குறிப்பாக முருகப்பெருமானுக்கு இந்த நாளில் பாலாபிஷேகம் செய்வது சிறப்பு. அருகில் உள்ள திருக்கோயிலுக்குப் பால் கொண்டு சென்று சமர்ப்பணம் செய்ய வேண்டும். குறைந்த அளவு பாலாக இருந்தாலும் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நம் தலையில் சுமந்து ஆலயத்துக்குச் செல்ல வேண்டும் (பால்பாக்கெட்டாகக் கொண்டு செல்வது தவறு.)  தைப்பூசத்தன்று பால் குடம் எடுக்கும் வழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் அதற்கு முறையாக விரதம் இருந்து எடுக்க வேண்டும். விரதம் இருக்காதவர்களாக இருந்தால் அவர்களும் பாலை ஒரு சிறு பாத்திரத்தில் விட்டுத் தலையில் சுமந்து சென்று பக்தியோடு சமர்ப்பித்தால் பால்குடம் எடுத்து வழிபட்ட பலன் கிடைக்கும்.இந்த நாளில் மந்திர உபதேசம் பெறுவது சிறப்பு. முருகன் அடியார்களுக்குத் தங்களால் ஆன உதவியும் உபசாரமும் செய்வது மிகவும் சிறப்பு.

Related Articles

Back to top button
Close
Close