கன மழையால் ஏற்பட்ட இழப்பு ரூ.8,316 கோடியை தொட்டது ; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு!
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து கொண்டுள்ள நிலையில் அதிக அளவு பொருட் சேதமும் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட சேதத்தின் அளவை கணித்த போது ரூ.8,316 கோடியை தொட்டுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை 440 முகாம்கள் திறக்கப்பட்டு அதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை தங்கவைக்க பட்டுள்ளனர். இடுக்கி, வயநாடு , மலப்புரம் ஆகிய இடங்களில் கன மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன், மண் சரிவாழும் , வெள்ளத்தாலும் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.கன மழையால் இடுக்கி, வயநாடு , மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது எனவே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம், கடற்படை , விமானப்படை என அனைத்து தரப்பு வீரர்களும் களம் இறங்கி உள்ளனர். அவர்களை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய இடுக்கி, வயநாடு , மலப்புரம் ஆகிய மாவட்டங்களை நேரில் பார்வையிட
கேரள முதல்வர் பினராய் விஜயன் ஹெலிகாட்டரில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வருவாய் துறை அமைச்சர் ஆகியோருடன் நேரில் சென்று பார்த்தார். அந்த மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதை பார்த்த அவர்
இறந்தவர்களின் குடுபத்திற்கு தலா ரூ.4 லட்சமும் , வீடு இழந்தவர்களுக்கு ரூ.4 லட்சமும் , வீடு மற்றும் நிலம் இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் நிவாரணமாக கொடுக்கப்படும் என்று கூறினார்.
ரெட் அலர்ட் ;
இடுக்கி, வயநாடு , பாலக்காடு, எர்னா குளம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ‘ ரெட் அலர்ட்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது. கன மழையால் அனைத்து அணைகளும் நிரம்பியதால் 24 அணைகளும் அடுத்தடுத்து திறக்கப்பட்டது.கேரளாவில் 24 அணைகளும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.