fbpx
RETamil News

கடலில் சிக்கி தத்தளித்த இந்திய கடற்படை அதிகாரி மீட்கப்பட்டார் !!

பாய்மர படகில் உலகை வளம் வரும் போட்டியில் கலந்துகொண்டு மாயமான இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் தோமி தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

இந்திய கடற்படை அதிகாரி பாய்மர படகில் உலகை வளம் வரும் போட்டியில் கலந்துகொண்டு இந்தியப் பெருகக்கடலில் தெற்கு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கடும் புயல் ஏற்பட்டது. அதனால் கடந்த 21-ஆம் தேதி அபிலாஷ் தோமியின் படகு சேதமடைந்தது. இது குறித்து அவர் அனுப்பிய தகவலில் அவர் புயலால் காயமடைந்துள்ளதாகவும் , தன் படகும் சேதமடைந்துள்ளதால் அந்த இடத்தை விட்டு நகரமுடியாதநிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

கன்னியாகுமரிக்கு தெற்கே ஐயாயிரத்தி இருபது கிலோமீட்டர் தொலைவில் தான் இருப்பதாக இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் தோமி பாதுகாப்பு கருவியின் மூலம் விமானிக்கு பதில் அளித்திருந்தார். இந்த தகவலை அறிந்ததும் இந்திய கடற்படையின் , கப்பல்கள்,விமானம், ஹெலிகாப்டர் ஆகியவை விரைந்து அவரை மீட்க சென்றனர். ஆனால் இந்திய கப்பல்கள் அவரை மீட்க செல்வதற்கு முன்பே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மீன்பிடி கப்பல் அப்பகுதிக்கு சென்று அவரை மீட்டது. மேலும் முதற்கட்ட தகவலாக அவர் பாதுகாப்புடன் இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close