RETamil Newsஇந்தியா
என்ன ஒரு கொடூரம் ; இளம் பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்ற அவலம் ;
வாலிபன் ஒருவரை கொலை செய்ததாக சந்தேகப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் பெண் ஒருவரை தாக்கி நிர்வாணப்படுத்தி , அடித்து இழுத்து சென்ற அதி கொடூர சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
பீகார், போஜ்புர் என்ற இடத்தை சேர்ந்தவர் விமலேஷ் ஷா 19. இந்த வாலிபர் கடந்த திங்கட்கிழமை அன்று காணாமல் போனதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவரது உடல் ரயில்வே தண்டவாளத்திலிருந்து கண்டடுக்கப்பட்டது.
இந்த தகவலை கேட்ட விமலேஷ் ஷாவின் சகோதரி மாரடைப்பால் காலமானார். இவ்வாறு ஏற்பட்ட இந்த இரண்டு சம்பவங்களும் அவர்களின் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அந்த வாலிபனில் மரணத்திற்கு காரணமாக ஒரு பெண்ணை சந்தேகப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த பெண்ணை , அடித்து , உதைத்து , நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்றனர்.