RETamil Newsஉலகம்
உலகம் முழுவதும் யூ – டியூப் இணையதள சேவை முடக்கம்
உலகம் முழுவதும் மக்கள் பலரும் பயன்படுத்தி வரும் யூ – டியூப் இணையதள சேவை முடங்கியுள்ளது. மக்கள் தாங்கள் விரும்பிய படி சமையல் ரெசிஃபி முதல் உடற்பயிற்சி செய்முறை என பலவற்றுக்கும் யூ – டியூப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று உலகமெங்கும் யூ – டியூப் செயல்பட வில்லை.
சர்வர் கோளாறு காரணமாக யூ டியூப் இணையதளம் முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்க் டாப் மற்றும் மொபைல்களில் இண்டர்னல் சர்வர் எரர் என்றே காட்டுகிறது.
யூ – டியூப் செயல்படாதது குறித்து அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடு முழுவதும் புகார்கள் குவிந்துள்ளன. தொடர்ந்து குவிந்த புகாரினால் இண்டர்னல் சர்வர் எரர் விரைவில் சரிசெய்யப்படும் என்றும், நடந்த குளறுபடிக்கு மன்னிப்பும் கேட்டுள்ளது யூ – டியூப்.