இந்திய ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்தி சாதனை !

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தொற்று எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்தியாமுழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,380-ஆக அதிகரித்துள்ளது.இறப்பு எண்ணிக்கை 414-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் திருப்பு முனையாக இந்தியாவில் உள்ள குஜராத் பயோ டெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் ஜிபி ஆர் சி விஞ்ஞனிகள் கொரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசை படுத்துவதில் வெற்றி அடைந்துள்ளனர்.
குஜராத்தின் முதல் மந்திரி அலுவலகம் இந்த சாதனையை செய்த நாட்டின் முதல் மாநில அரசு ஆய்வக ஜி பி ஆர் சி விஞ்ஞனிகளை பாராட்டி உள்ளது.

வைரஸின் தோற்றம் , மருந்து இலக்குகள், தடுப்பூசி மற்றும் வைரஸுடன் தொடர்பு கொள்வதில் முழு மரபணு வரிசை முக்கிய பங்கு வகிக்கிறது.
குஜராத் முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலானது ;
” குஜராத் பயோ டெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் ஜி பி ஆர் சி விஞ்ஞனிகள் இந்த சாதனையை செய்து பெருமை அடைந்துள்ளனர். இது கொரோனா வைரஸின் முழு மரபணு வரிசையையும் கண்டறிந்துள்ள ஒரே மணிலா அரசு ஆய்வகமாகும். இது வைரஸின் தோற்றம் , மருந்து இலக்குகள், தடுப்பூசி மற்றும் வைரஸுடன் தொடர்பு கொள்வதில் முழு மரபணு வரிசை முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் மரபணுவின் முழுமையான டி.என்.ஏ வரிசையை தீர்மானிக்க முழு மரபணு வரிசை முறை பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் உள்ள இரண்டு வகை வவ்வால்களில் இந்த கொரோனா வைரஸை கண்டுபிடித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.















