சுனாமியால் பாதித்த இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 429-ஆக மேலும் உயர்வு !

கடந்த சனிக்கிழமை அன்று இந்தோனேசியாவிலஜாவா மற்றும் சுமத்ரா ஆகிய தீவுகளுக்கு இடையே உள்ள எரிமலை வெடித்ததில் உண்டான சுனாமி அலைகளில் சிக்கி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 429 பேரையும் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
கடலுக்கடியில் இருந்த எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்ட இந்த பேரலைகள் இந்தோனேசியாவில் முன்பு எப்போதும் ஏற்படாத அளவுக்கு அதாவது 20அடி உயரத்தில் எழுந்து ஊருக்குள் புகுந்து பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு உருவான பேரலைகளில் கட்டிடங்களுடன் , கார் , மோட்டார்சைக்கிள்கள் ஆகியவைகளும் அடித்து செல்லப்பட்டுள்ளன.
மேலும் இந்த சுனாமி பற்றி எந்த முன்னெச்சரிக்கையும் விடப்படவில்லை. உயிர்சேதமும் , பொருட் சேதமும் ஏற்படுத்திய இந்த சுனாமியால் பல்வேறு மரங்களும் வேரோடு சாய்ந்து , சாலை நடுவே விழுந்து போக்குவரத்தையும் பாதிக்கின்றன.இந்த பேரிடரில்1400-க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கி காயமடைந்துள்ளதாகவும், ஆரூரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாகவும் உள்ளனர். பலரை காணவில்லை என்பதால் அவர்களும் உயிரிழந்திருக்கக்கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அது மட்டுமின்றி எரிமலை தொடர்ந்து வெடித்து வருவதால் சுனாமி அலைகள் மீண்டும் எழ வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்தோனேசியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய, அமெரிக்க நாடுகள் தங்களால் முடிந்த உதவியை செய்து தருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளன.
முன்பு 2006-ஆம் ஆண்டு டிசெம்பர் 26-ஆம் தேதி அதாவது சரியாக 14 வருடங்களுக்கு முன் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது. இலட்சக்கணக்கானோர் உயிரை இழந்தனர். இதில் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் பாதிப்புக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.















