fbpx
RETamil Newsஇந்தியா

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் – மத்திய அரசு அறிவிப்பு

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னர் ஆன்லைன் மூலம் நீட் தேர்வு நடத்தப்படும் என ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. கணினி முறையில் நீட் தேர்வு நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் மூலமாக மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் என்றும், 2019-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 15-ஆம் தேதி நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் 2019 ஜூன் மாதம் 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

2018 நவம்பர் 1 முதல் 30 -ஆம் தேதி வரை நீட் தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close