fbpx
RETamil News

தமிழகத்தில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் இலேசான மழை

நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் வெப்பம் நிலவுகிறது.

இந்நிலையில் , வெப்பம் தணியும் வகையில் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து உள்ளது. தஞ்சாவூரில் உள்ள அதிராம்பட்டினத்தில் இன்று மலை 6.30 மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை பரவலாக மழை பெய்தது.

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பல்வேறு பகுதிகளில் அதாவது தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் அங்கு குளிர்ந்த நிலை நிலவியது. மேலும் கடலோர பகுதிகளிலும் மிதமான மழை பெய்து மக்களை குளிர்வித்து.

இவ்வாறு பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close