அமெரிக்காவை தாக்க வருகின்றது ; ஃபிளோரன்ஸ் சூறாவளி
அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிகளை ஃபிளோரன்ஸ் சூறாவளி தாக்க வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடக்கு மாற்று தெற்கு கரோலினா மாகாணங்களை நோக்கி இந்த சூறாவளி மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது.
ஃபிளோரன்ஸ் சூறாவளி அதிக அளவிலான சேதத்தை ஏற்படுத்தலாம் , மேலும் அதிக எண்ணிக்கையில் மக்களின் உயிரை எடுக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் 1 லட்சத்திற்கும் மேலான வீடுகளில் மின் இணைப்பு , சேதமடைந்துள்ளதால் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்று கருதப்படுகின்றது.
மேலும் அமெரிக்காவின் உட்புறத்தில், வெள்ளதையும் , பெரும் சேதத்தையும் இந்த ஃபிளோரன்ஸ் சூறாவளி
ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் மத்திய அவசரகால மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வடக்கு , மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் வசிக்கும் 1.7 மில்லியன் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு கரோலினா மாகாணங்களில் ஏற்கனவே காற்று மாற்று மழையினால் அங்கு வெள்ளம் ஏற்பட தொடங்கியுள்ளது.
ஃபிளோரன்ஸ் சூறாவெளியின் வேகம் குறைந்தாலும் , அதன் பரப்பு அதிகரித்து உள்ளதால் அது உருவாக்கும் ஆபத்துக்கள் குறையவில்லை என்று லாங் எனும் அவசரகால மேலாண்மை அதிகாரி வியாழக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.