fbpx
GeneralRETamil Newsஅரசியல்தமிழ்நாடு

பாஜக மாநில துணைத்தலைவராக விபி துரைசாமி நியமனம்…! எல். முருகன் அறிவிப்பு!

VP duraisamy appointed as BJP Vice president

சென்னை:

தமிழக பாஜகவில் மாநில துணைத்தலைவராக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுகவில் கடும் அதிருப்தியில் இருந்த வி.பி. துரைசாமி தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்ததால் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

பாஜக அலுவலகம் வந்து எல்.முருகனை சந்தித்து தம்மை பாஜகவில் இணைத்துக்கொண்டார். இந் நிலையில் தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பட்டியலில் திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. வானதி சீனிவாசனும் தமிழக பாஜக துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவில் சேர்ந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தமிழக பாஜக பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close