அமெரிக்க அதிபருடன் சந்திப்பு : வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சென்றடைந்தார்!!!
சிங்கப்பூர்
அமெரிக்க அதிபருடன் சந்திப்பு நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் வந்துள்ளார்.
வடகொரியாவின் அணு ஆயுத சோதனையால் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் கடும் பகை நிலவி வந்தது.
இரு நாடுகளும் ஒன்றை ஒன்று மிரட்டி வந்தது. பல நாடுகள் தலையிட்டு சமாதானம் செய்த பின் இரு நாடுகளும் இறங்கி வந்தன. இரு நாட்டு அதிபர்களும் சிங்கப்பூரில் சந்திக்க ஒப்புக் கொண்டனர்.
அதன் பின்னரும் இரு நாட்டு அதிபர்களும் சந்திப்பை ரத்து செய்து மீண்டும் உறுதி செய்தனர். இந்த மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள செண்டோசா தீவில் அமைந்துள்ள கோபெலா ஓட்டலில் சந்திப்பு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு சுமார் 2500 பத்திரிகையாளர்கள் முன்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த சந்திப்பில் கலந்துக் கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே சிங்கப்பூருக்கு சென்று விட்டார்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஏர் சீனா விமானம் மூலம் தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார்.