fbpx
Others

இருளை நோக்கி நகரும் தமிழகம்–எடப்பாடிகேள்வி…?

 

எடப்பாடி பழனிசாமி: "திமுகவின் 'பி' அணி, கைப்பாவை ஆக செயல்படும் ஓபிஎஸ்" -  தேர்தல் ஆணைய அறிவிப்புக்குப் பிறகு பேசியது என்ன? - BBC News தமிழ்‘‘மின்சாரம் போனது… இன்னும் வரவில்லை…” சில வாரங்களாக தமிழகத்தின் பல நகரங்கள், கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் அதிகமாக உச்சரிக்கும் வாக்கியம் இதுதான். இதனால் வீடுகள், சிறு தொழில்கள், விவசாயம், மாணவர்களின் படிப்பு என அனைத்தும்பாதிக்கப்படுவதாகமக்கள்புலம்புகின்றனர். தமிழகத்தின் மின் தேவை 2026-27ம் ஆண்டில் 23,013 மெகாவாட் வரை செல்லும் என்று மத்திய மின்சார ஆணையத்தின் கணிப்பு தெரிவிக்கிறது.அப்படியானால், எதிர்கால தேவைக்கேற்ப மின் உற்பத்தி, மின் கொள்முதல், சேமிப்பு வசதிகள், துணை மின் நிலையங்கள் போன்றவற்றில் முன்கூட்டியே திட்டமிடல், போதுமான அளவில் ஏன் நடக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஒரே புகார் சமூக ஊடகங்களில் தினமும் நூற்றுக்கணக்கான பதிவுகள். இரவு 11 மணிக்கு மின்தடை, குழந்தைகள் தூங்க முடியவில்லை, ஆன்லைன் தொழில்கள் பாதிப்பு, சிறு தொழிற்சாலைகள் இயங்கவில்லை, விவசாய பம்ப் செட் மோட்டார்கள் இயங்க முடியவில்லை என பல்வேறு புகார்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.அமைச்சரோ `பீஸ் கேரியர் திருட்டு’ என்று விளக்கம் அளிக்கின்றார். ஆனால், மக்கள் கேள்வி வேறு. ”தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் பீஸ் கேரியர் திருட்டு போனதா?” ஒரு மணி நேர மின்தடை என்பது ஒரு வீட்டின் பிரச்னை மட்டுமல்ல. அது, தொழிற்சாலைகளில்உற்பத்திஇழப்பு,விவசாயிகளின் பயிர் பாதிப்பு, மாணவர்களின் கல்வி பாதிப்பு, சிறு வணிகர்களின் வருமான இழப்பு, மருத்துவ சேவைகளுக்கு சிக்கல் என பல அடுக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.மக்கள் எதிர்பார்ப்பது என்ன? மின் தடைக்கான காரணம் என்ன என்பது பற்றிய விவாதம் அல்ல. மாவட்ட வாரியாக உண்மையான தரவுகள் வெளியிடப்பட வேண்டும். எவ்வளவு மின் தேவை? எவ்வளவு உற்பத்தி? எவ்வளவு கொள்முதல்? எந்த பகுதிகளில் அதிக மின் தேவை என்பதை அறிந்து அதை உடனே சரிசெய்யப்பட வேண்டும் என்பதேமக்களின்கோரிக்கை.தற்போதைய பொய்க்கால் குதிரை அரசு, அணில் குஞ்சுகள் ஆட்சியில், மின் கடத்தி கட்டை (பீஸ் கேரியர்) திருடு போவதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.அதிகரிக்கும் மின் வெட்டு, அவதியுறும் தமிழக மக்கள், இருளை நோக்கி நகரும் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. இதுபோன்ற சால்ஜாப்பு பேச்சுகளை கைவிட வேண்டும்.ஏனெனில், மின்சாரம் என்பது வெறும் ஒரு வசதி மட்டுமல்ல; அது ஒரு மாநிலத்தின் வளர்ச்சி. தொழில், கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையை இயக்கும் உயிர்நாடி. எனவே, மின் தடை பற்றி பொதுமக்களிடம் கூறுவதற்கு காரணங்களைத் தேடி நேரத்தை செலவழிக்காமல், தடையில்லா மின்சாரம் வழங்க பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.* சிங்கப்பெண் அதிரடிப்படைக்கான முதல் வழக்கே ஸ்ரீவைகுண்டம் ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது தானா? எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முதல்வரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.  சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கேஆளுங்கட்சி வழக்கா? அதுவும், ஒரு ஆளுங்கட்சி எம்எல்ஏ இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா?உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில், உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்தகொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா? ‘அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்’ என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரை தாண்டிய ஏதேனும் பவர் சென்டரா?சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரை பார்த்து பேசுங்கள் முதல்வர் அவர்களே! பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி எம்எல்ஏவை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா? இந்த வழக்கைஎந்தஅரசியல்இடையூறுக்கும்இடமின்றிவிசாரித்து,எம்எல்ஏவாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

Related Articles

Back to top button
Close
Close