ராணிப்பேட்டை—தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர்ஆர்ப்பாட்டம்..

ராணிப்பேட்டை மாவட்டம்
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர். இருதயமேரி தலைமை தாங்கினார் துணைத் தலைவர் நிர்மலா அனைவரையும் வரவேற்று பேசினார் மாவட்ட பிரச்சார செயலாளர் திலகவதி, செயலாளர் ஷெல்லா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்சி சர்மிளா ஜாய்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் இருதயமேரி கோரிக்கை விளக்கவுரையாற்றினார் அவர் பேசும்போது துணை சுகாதார மையங்களில் எம் எல் எச் பி பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும், துணை சுகாதார நிலையங்களில் ஒப்பந்த செவிலியர்கள் தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, கொரோனா காலகட்டத்தில் இரவு பகல் பாராமல் பணி செய்தோம் இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் நோய் தடுப்பு பணியில் செவிலியர்கள் சரிவர பணியாற்றவில்லை என்று குற்றம் சாட்டுகிறார் இதனை வன்மையாக கண்டிக்கிறோம் பொய் தகவல்களை கூறிய அமைச்சர் அதனை திரும்ப பெற வேண்டும் என்றனர் சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் பணியினை ஒப்பந்த செவிலியர்கள் செய்ததாக பொய்யான அறிக்கை வெளியிடுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கருத்துக்களை பேசினார். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மாவட்ட செயலாளர் என்.ராஜேஸ்வரி நன்றி கூறினார்.