fbpx
Others

மேயர் வசந்​தகு​மாரி தலை​மை​யில் தாம்பரம் மாநக​ராட்சி கூட்​டம் நடை​பெற்​றது.

தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களால் சலசலப்பு

தாம்பரம் மாநக​ராட்சி கூட்​டத்​தில் துணை மேயர் காம​ராஜ், துணை ஆணையர் நாராயணன், கவுன்​சிலர்​கள் பங்கேற்றனர்.கூட்​டம் தொடங்​கியதும், தமிழகத்​தில் வளர்ச்சி திட்​டங்​களை செயல்​படுத்​திய முன்​னாள் திமுக ஆட்​சிக்​கும், தாம்​பரம் மாநக​ராட்​சியை உரு​வாக்கி ஜிஎஸ்டி சாலை​யில் புதிய மாநக​ராட்சி அலு​வல​கம் அமைக்க நடவடிக்கை எடுத்த முன்​னாள் முதல்​வர் ஸ்டா​லினுக்கும் நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்தை 2-வது மண்​டலக் குழு தலை​வர் ஜோசப் அண்​ணாதுரை முன்​மொழிந்​தார்.தொடர்ந்து 2020, 2021-ம் ஆண்​டு​களில் மேற்​கொள்​ளப்​பட்ட பணி​களுக்​கான நிலுவை பில்​களை வழங்​கு​வது தொடர்​பாக 9 தீர்​மானங்​கள் கொண்டு வரப்​பட்​டன. நிறைவாக மொத்​தம் 331 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.4-வது மண்டல தலை​வர் காம​ராஜ், 5-வது மண்டல தலை​வர் இந்​திரன், 35-வது வார்டு சுயேட்சை கவுன்​சிலர் சங்​கீ​தா, 41-வது வார்டு திமுக கவுன்​சிலர் கற்​பகம், அதிமுக எதிர்க்​கட்சி தலை​வர் சங்​கர், 26-வது வார்டு மதிமுக கவுன்​சிலர் புஸிரா பானு தங்கள் வாட்டுகளில் உள்ளகுடிநீர்தட்டுப்பாடு,நிலுவைப்பணிகள்குறித்துகூறினர்.தனதுவார்டுபுறக்கணிக்கப்படுவதாக 50-வது வார்டு மமக கவுன்​சிலர் யாக்​கூப் வெளிநடப்பு செய்​தார். சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான வேளச்சேரி–தாம்பரம் உயர்சாலைக்கு, அசோக் சக்ரா விருது பெற்ற மறைந்த இந்திய ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட உள்ளது .இதற்கான தீர்மானத்தை தாம்பரம் மாநகராட்சி மன்றம் நிறைவேற்றியுள்ளது. 16 கிமீ நீளமுள்ள இந்த சாலையின் பெயர் மாற்றம், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த அவரது வீரத்தையும் தியாகத்தையும் கவுரவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close