fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகர் கிரிஷ் கர்நாட் இருவரையும் கொலை செய்ய மிகப்பெரிய சதி அம்பலம்!!!

கடந்த ஆண்டு பிரபல பத்திரிக்கையாளர் கௌரி லிங்கேஸ் அவர்களைகொலை செய்த குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் கிரிஷ் கர்நாட் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்ட தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு, செப்டெம்பர் 5 ஆம் தேதி, கர்னாடக மாநிலத்தின் பிரபலஎழுத்காளர் கௌரி லிங்கேஸ் கொலை செய்யப்பட்டர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்றும், தங்களுக்கான உரிமை இல்லாமல் போகிறது என்றும் நாடு முழுவதும் இந்த கொலை சம்பவத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

பின்னர் குற்றவாளிகளை பிடிப்பதற்காக சிறப்பு காவல் படை அமைக்கப்பட்டு, நவீன்குமார் என்பவனை  கைது செய்தது போலீசார்.

இவன் மூலம் மற்ற குற்றவாளிகளான மோல் காலே, அமித் தெக்வெக்கர், பரசுராம் வாக்மாரே போன்றோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களையும் கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.

நடிகர் பிரகாஷ் ராஜ் சமீப காலமாக தொடர்ந்து வலது சாரி சினதனைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ள சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதே போன்று, கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் புகழ்பெற்ற நடிகரான கிரிஷ் கர்நாடைகொலை செய்யவும் ப்ளான் செய்து உள்ளனராம்.

“ஆபரேஷன் காகா” என்ற பெயரில் ப்ளான் செய்த இந்த திட்டம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவிக்கும் போது, “அதற்கு வேறுபாடு இருந்தால் அதற்கு கொலை தான் தீர்வு என்பது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மதத்தை அரசியல் ஆக்க முயல்பவர்கள்மீது தான் எனது விமர்சனம் என்றும் பிரகாஷ்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்த பதிவை, நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close