நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் உறுப்பினர் ஆலோசனை கூட்டம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் உறுப்பினர் ஆலோசனை கூட்டம் தலைவர் திரு பத்ம ஶ்ரீ ராம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுப்பினர் ஆலோசனை வழங்கினார் செயலாளர் திரு ஜெகதிஸ்பாபு இந்த வருட செலவின கணக்குகளை விவரித்தார் பொது சேவை பற்றி விவாதிக்க பட்டது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .1. நீடாமங்கலம் ராயல் சிட்டி நுழைவாயில் பகுதிகளில் மின்விளக்கு அமைத்திட பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வழங்கிடவும்,இரவில் அப்பகுதி சாலையில் மது அருந்துவோர்களால் பொதுமக்களுக்கு சங்கடமான சூழல் ஏற்படுகிறது . இதை நிவர்த்தி செய்ய இயக்கம் சார்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை அனுப்ப தீர்மானிக்கப்பட்டது .2. கொத்தமங்கலம் தட்டி புது பாலம் அருகில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்திட உரிய அதிகாரிகளுக்கு மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.3. 31.08.24 அன்று நடைபெற்ற மருத்துவ முகாம் தொடர்பான வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டுஅங்கீகரிக்க பட்டது.