ராணிப்பேட்டை– ஓவிய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த
தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினர் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது ராணிப்பேட்டை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஓவியர்கள் ஓவியப்பணி செய்து வருவதாகவும் இப்பணியை பிழைப்புக்காக செய்வதை பார்க்கிலும் பொது சேவைக்கே அதிகமாக பணிபுரிந்து வருவதாவும்
கொரோனா காலகட்டத்தில் உயிருக்கு கூட கவலைப்படாமல் பொதுமக்களுக்கு சாலைகளில் விழிப்புணர் விளம்பரங்களை இலவசமாக வரைந்து கொடுத்தோம் என்கின்றனர்ஆனால் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் பெருகி வருவதால் ஓவியர்கள் எழுதும் பணி மிகவும் குறைந்து வறுமையில் வாடுவதாகவும் கூறியுள்ளனர் பெரும்பாலும் வாடகை வீடுகளில் குடியிருந்து வருவதாகவும் வாடகை கட்ட போதிய வருமானம் இல்லாததால்சிரமப்படுகிறோம் நாவிதர்களுக்கும் திருநங்கைகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது போல எங்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்அதேபோல் அரசு ஓவிய விளம்பர வேலைகள் ஓவிய தொழில்சாரா ஒப்பந்ததாரர்களிடம் தருவதற்கு பதிலாக எங்களுக்கு கொடுத்து உதவினால் மிகவும் உதவியாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியரை கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறியுள்ளனர்.