fbpx
Others

திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?

முஸ்லிம் லீக்- 3, ம.ம.க- 2: திமுக கூட்டணியில் முதல் ஒப்பந்தம் கையெழுத்துதமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதன் படி முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதன் படி அக்கட்சியுடன் டி.ஆர். பாலு தலைமையிலான  குழுவில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது தங்களுக்கு கடந்த முறை 3 தொகுதிகள்MDMK | Egmore ஒதுக்கப்பட்டது. தற்போது 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத திமுக பேச்சுவார்த்தைக்குழு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என உறுதியாக தெரிவித்துள்ளது. மேலும் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின்எண்ணிக்கையும் குறைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து இன்று காலை மனித நேய மக்கள் கட்சி மற்றும் மதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தங்கள் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். ஆனால் 2 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க வாய்ப்பு எனவும் அதுவும் உதயசூரியன்சின்னத்தில்போட்டியிடுமாறுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாககூறப்படுகிறது.  அடுத்தாக மதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது கடந்த முறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளை அதிகரித்து தர வேண்டும் என மதிமுக சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போது தனி சின்னத்தில் போடியிட இருப்பதாகவும், இது மட்டுமில்லாமல் மதிமுகவிற்கு ராஜ்யசபா இடம் ஒதுக்க வேண்டும் என பேச்சுவார்த்தையில் மதிமுக சார்பாக வலியுறுத்தப்ப்பட்டதாக மதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.ஆனால் மதிமுகவிற்கு தனி சின்னத்தில் போட்டியிடும் வகையில் 6 தொகுதிகளை ஒதுக்க திமுக தயாராக இல்லையென தகவல் வெளியாகியுள்ளது. எனவே மதிமுகவினரின் கோரிக்கையை கேட்டுக்கொண்ட திமுக பேச்சுவார்த்தைக் குழு முதலமைச்சரை சந்தித்து ஆலோசித்த பிறகு ஓரிரு நாட்களில் முடிவை தெரிவிப்பதாககூறப்பட்டுள்ளது.இதனையடுத்துஇந்தியகம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்  மற்றும் மநீம ஆகிய கட்சிகளுடன் வருகிற 26 மற்றும் 27ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close