fbpx
Others

செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி..

. நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி – செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தார்.அங்கு அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 11-வது முறையாக பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார். அதன் பின்னர் தேசியக் கொடிக்கு ஹெலிகாப்டர் மூலம்மலர்தூவப்பட்டது.பின்னர்நாட்டுமக்களுக்குசுதந்திரதினஉரையாற்றினார். அதில் வளர்ந்த பாரதம் 2047 (விக்சித் பாரத்) குறித்து பேசினார்.6,000 விருந்தினர்கள்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும்சுதந்திரதினவிழாவில்இளைஞர்கள்,பழங்குடியினசமூகத்தினர்,விவசாயிகள்,சிறப்புஅழைப்பாளர்கள்என6,000க்கும்அதிகமானசிறப்புவிருந்தினர்கள்பங்கேற்றனர்.செங்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் டெல்லி போலீஸார்,எல்லைபாதுகாப்புபடையினர்,ராணுவவீரர்கள்ஈடுபட்டுள்ளனர்.டெல்லி முழுவதும் உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம்தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அசம்பாவிதங்களை தடுக்க உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஏற்கெனவேபாதுகாப்புஅச்சுறுத்தல்விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு படையினர், உளவு பிரிவு போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close