fbpx
Others

வடகரை–போக்குவரத்து நெரிசலால் மக்கள் உயிருக்குஆபத்து…உடனடி நடவடிக்கை தேவை…?

ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட. செங்குன்றம் காவல் சரகம். வடகரை. சிக்னல் வழியாக. மாதவரம் செல்லும். நெடுஞ்சாலையில். மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னைக்கு உள் செல்லும் கனரக வாகனங்கள். சென்னையிலிருந்து வடமாநிலங்கள் செல்லும் கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாகசெல்கிறது.
குறிப்பாக சென்னை துறைமுகம் செல்லும் கண்டெய்னர் லாரிகள் பெருமளவில் இந்த பகுதியில் செல்கிறது.இதே போல் இன்டியன் ஆயில் கார்ப்பரேஷன். பெட்ரோல், டீசல் லாரிகள். அதிகம் செல்கிறது.இது மட்டுமல்லாது. வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் ஆற்று மணல் ஏற்றி வரும். டாரஸ் மெகா லாரிகள் இந்த சாலை வழியாகத்தான் புள்ளி லயன் பகுதிக்கு செல்கிறது.இதனால் இந்த சந்திப்பு பகுதியில் மிகுந்த நெரிசல் ஏற்படுகிறது.இந்த பகுதியில். அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலை பள்ளி உள்ளது அதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.அவர்களின் உயிருக்கும். ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.கார், மோட்டார் சைக்கிள்.ஆட்டோ விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது.ஆகவே. போக்குவரத்து காவல்துறை. உடனடியாக. இந்த சிக்னல் பகுதி சாலையை. விரிவாக்கம் செய்வதோடு. கனரக வாகனங்கள். செல்வதற்கான நேரத்தை ஒதுக்கி. அதன்படி. செயல்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது மக்கள் உயிருக்கும். ஆபத்து ஏற்படாது.இதற்கு உடனடி நடவடிக்கை தேவை என. வடகரை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். வழக்கறிஞர். ஜானகிராமன் மற்றும். இப்பகுதி. கிராம குடியிருப்போர். நல சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close