RETechnologyஇந்தியா

ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்த முடிவு !

கோல்கட்டா:

எப்பொழுது ஊரடங்கு முடியுமோ அதுநாள் வரையில் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி  செய்வதை நிறுத்துவதாக  முன்னணி போன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

கொரோன வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வரும் மே மாதம் 3 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

மேலும் இன்று ,20 ம் தேதி ,முதல் ஊரடங்கை  மாநிலங்கள் தங்கள் பகுதிகளில் தளர்த்தி கொள்ளலாம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனிடையே தமிழகம், தெலுங்கானா, கர்நாடக மாநிலங்கள் மே 3ம் தேதி வரையில் தொழில்களுக்கு உத்தரவு வழங்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டன.

இதனிடையே எலக்ட்ரானிக்ஸ் தொழில்துறை அமைப்பின் தலைவர் மற்றும் நுகர்வோர்  மின்னணுவியல் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவருமான கமல் நந்தி கூறும்போது;

உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்கின்றன.

தற்போதைய சூழ் நிலையில் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் சந்தைகள் மூடப்பட்டிருப்பதால் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.

பல சிறு நிறுவனங்கள் சிவப்பு ஸ்பாட் பகுதியில் அமைந்துள்ளன.

மேலும் தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு போக்குவரத்து வசதியுமில்லை.

இதன்காரணமாக ஊரடங்கு முடியும் வரையில் உற்பத்தியை நிறுத்துவது என  திட்டமிடப் பட்டு உள்ளது என அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close