RETamil Newsஇந்தியா

தீவிரமாக பரவும் கொரோனா பாதிப்பு:4 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை !!

மும்பை, கொல்கத்தா, ஜெய்பூர் மற்றும் இந்தூரில் கொரோனா தொற்று பாதிப்புகள் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாகவும்,

ஊரடங்கு விதிகளை அலட்சியப்படுத்தினால் நிலைமை மிகவும் மோசமாகி விடும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மத்திய அரசு எச்சரித்துள்ள நான்கு மாநிலங்கள் ;

மகாராஷ்டிரா,

மேற்கு வங்காளம்,

ராஜஸ்தான்

மத்தியப் பிரதேசம்

இந்த நான்கு மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில்,

கொரோனா தடுப்புப் பணியாளர்கள் தாக்கப்படுவதுடன், சமூக விலகியிருத்தல் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த 4 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை ஆய்வு செய்து தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்காக 6 குழுக்களை மத்திய அரசு  இன்று ஏற்படுத்தி உள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close