fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சென்னையில் கொரோனா பாதிப்பில் முதலிடம் ராயபுரம்…! 2000 பாதிப்பை நெருங்குகிறது!

Rayapuram nearing 2000 corona cases

சென்னை:

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 1981 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள கொரோனா பரவல் ஊரடங்கு உத்தரவு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா தொற்று குறையவில்லை. தமிழகம் இந்த பாதிப்பில் 2வது இடத்தில் இருக்கிறது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 576 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் உள்ள 5 மண்டலங்களில் தான்  கொரோனா பாதிப்பு  ஆயிரத்தை கடந்துவிட்டது.

ராயபுரம் மண்டலத்தில் 1,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் 1,460, திரு.வி.க.நகர் 1,188, தேனாம்பேட்டை 1,118 மற்றும் தண்டையார்பேட்டை 1,044 ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close