REஅரசியல்இந்தியா

மே 3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு!

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்

கொரோனாவை கட்டுப்படுத்த நாம் பயணிக்கும் பாதை சரியானது ஆகும்.

ஊரடங்கும் , சமூக இடைவெளியும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முக்கியமான பங்காற்றுகின்றன.

இந்திய மக்கள் ஊரடங்கால் படும் துயரங்களை என்னால் உணர முடிந்தது.

இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதை மேலும் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

இந்த 19 நாட்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியம் வாய்ந்தது’ என கூறினார்.
21 நாட்கள் ஊரடங்கு முடிந்த நிலையில் மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் ஏப்ரல் 20 க்கு பிறகு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 7 முக்கிய வேண்டுகோள் விடுத்தார். அதில் ,

வீட்டிலுள்ள முதியோர்களின் நலனில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கொரோனாவை கண்டறியும் ஆரோக்கிய சேது செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

ஏழை , எளிய மக்களுக்கு உதவுங்கள்

மருத்துவர்கள் , செவிலியர்கள் , காவல் துறையினரின் சேவைகளை மதியுங்கள்.

மக்கள் வெளியில் வரும் போது கட்டாயம் முகக் கவசம் அணியுங்கள்  என்று பிரதமர் தனது உரையின் மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Related Articles

Back to top button
Close
Close