fbpx
RETamil NewsTrending Now

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : முதல்முறையாக இணையதளத்தில் மட்டுமே வெளியிட்டு அசத்தல்!!!

கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடந்த +2 தேர்வு முடிவுகள் இன்று காலை சரியாக 9.30 மணிக்கு

http://www.tnresults.nic.in/ http://www.dge1.tn.nic.in/ http://www.dge2.tn.nic.in/ ஆகிய மூன்று இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், மாணவர்கள் படித்த பள்ளிகள் ஆகிய இடங்களிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் அல்லது இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தங்களது பள்ளிகளில் வழங்கிய மொபைல் எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது வழங்கிய மொபைல் எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் என அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது .

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close