RETamil News
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: கோவை, நீலகிரி, தேனி,மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.